சேத்தியாத்தோப்பு அருகே கார் மோதி சிறுமி பலி
சேத்தியாத்தோப்பு அருகே கார் மோதி சிறுமி உயிரிழந்தாள்.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் ஊராட்சி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வசேகர். இவரது மகள் சிவன்யா (வயது 4). நேற்று சிறுமி அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அப்போது அந்த வழியாக சேலம் மார்க்கத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக சிறுமி சிவன்யா மீது மோதியது. இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அந்த சிறுமியை, அதே காரில் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
சிறுமி சாவு
ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி சிவன்யா பரிதாபமாக உயிரிழந்தாள். இறந்த சிறுமியின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்து செல்வசேகர் அளித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story