எஸ்டிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


எஸ்டிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2021 10:54 PM IST (Updated: 6 Dec 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

எஸ்டிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தாராபுரம், 
பாபர் மசூதி இடிப்பு தினத்தை கண்டித்து தாராபுரத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாராபுரம் தொகுதி தலைவர் முஹம்மது முஸ்தபா தலைமை தாங்கினார். தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் கூறுகையில், டிசம்பர் 6 ஒவ்வொரு இஸ்லாமியர்கள் மத்தியிலும் மறக்க முடியாத ஒரு நாள். இந்திய நாட்டில் பாபர் மசூதி இடிப்பு போன்று வேறு எந்த ஒரு சம்பவமும் இனிமேல் நடைபெறக்கூடாது. எனவே பாபர் மசூதி இடித்த இடத்திலேயே மீண்டும் பாபர் மசூதி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹாரிஸ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சையது அபுதாகீர், முகம்மது இஸ்மாயில் மற்றும் தாராபுரம் தொகுதி இணை செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story