எருமப்பட்டியில் கஞ்சா செடி வளர்த்ததாக 2 பேர் கைது
எருமப்பட்டியில் கஞ்சா செடி வளர்த்ததாக 2 பேர் கைது
எருமப்பட்டி:
எருமப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சரவண பாண்டியன் (வயது 28). இவர் வீட்டின் முன்பு உள்ள காலி நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டு உள்ளதாக எருமப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் வாழை மரங்களுக்கு இடையே 3 அடி உயரமுள்ள 10 கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதை போலீசார் கண்டறிந்து அவற்றை அழித்தனர். மேலும் சரவண பாண்டியனை கைது செய்த போலீசார் யார் கஞ்சா செடி விதைகளை கொடுத்தது? மேலும் அவற்றை யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கஞ்சா செடி வளர்க்க சரவண பாண்டியனுக்கு உதவியதாக எருமப்பட்டி வ.உ.சி தெருவை சேர்ந்த கர்ணன் மகன் வேல்முருகன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story