‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 6 Dec 2021 10:58 PM IST (Updated: 6 Dec 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிமெண்டு ரோடு அமைக்கப்படுமா?
நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி வராகி அம்மன் கோவில் தெருவில் மழைநீர் தேங்கியதால் சேறும் சகதியுமாக உள்ளது. எனவே, அங்கு மழைநீர் தேங்காதவாறு வாறுகால் மற்றும் சிமெண்டு ரோடு அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சின்னத்துரை, முனைஞ்சிப்பட்டி.

மின்விளக்கு எரியவில்லை
நெல்லை டவுன் நயினார்குளம் சாலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மின்விளக்கு எரியவில்லை. மேலும், அங்கு சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தெருவிளக்குகள் மீண்டும் ஒளிரவும், சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜாமிஆ ஆஷிக், டவுன்.

சுகாதாரக்கேடு
நெல்லை மேலப்பாளையம் 28-வது வார்டு டி.நகரில் உள்ள ஓடையில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, ஓடையில் உள்ள அடைப்புகளை அகற்றி கழிவுநீர் வழிந்தோடவும், வாறுகால் வசதி அமைத்து தருவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
முகம்மது உசேன், மேலப்பாளையம்.

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்
நெல்லை தியாகராஜ நகர் 12-வது தெற்கு தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால், சாலையில் கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு சுகாதாரக்கேடு ஏற்படுவது மட்டுமல்லாமல் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, பாதாள சாக்கடை அடைப்பை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ், தியாகராஜ நகர்.

குண்டும் குழியுமான சாலை
நெல்லை ஸ்ரீபுரத்தில் இருந்து ஊருடையார்புரம் வழியாக தச்சநல்லூருக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது பெய்த மழையில் சாலை முழுவதும் உருக்குலைந்து சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அடிக்கடி வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, பழுதடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
கணேசன், ஊருடையார்புரம்.

எரியாத தெருவிளக்கு
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் பூலாங்குளம் பஞ்சாயத்து நாலுமுக்கு ரோடு தென்புறம் ஏ.டி.எம். அருகில் உள்ள தெருவிளக்கு கடந்த 6 மாதங்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, தெருவிளக்கு மீண்டும் எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுதாகர், பூலாங்குளம்.

வடியாத மழைநீர்
ஆலங்குளம் யூனியன் ஊத்துமலை பஞ்சாயத்து அரண்மனை தெருவில் மழைநீர் வழிந்தோடாமல் குளம் போன்று தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, அங்கு வாறுகால் அமைத்து மழைநீர் வழிந்தோடுவதற்கு நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
சிவா, ஊத்துமலை.

சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய பிள்ளையார் கோவில் எதிரே உள்ள மின்கம்பத்தைச் சுற்றிலும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
டெக்கான், கீழக்கலங்கல்.

அந்தரத்தில் தொங்கும் தெருவிளக்கு
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையில் இருந்து புதுமனை செல்லும் வழியில் சாலையோரம் உள்ள மின்கம்பத்தின் தெருவிளக்கு பெயர்ந்து ஒயரில் அந்தரத்தில் தொங்கியவாறு உள்ளது. பலத்த காற்றில் மின்விளக்கு அங்கும் இங்கும் அசைந்தாடுகிறது. இதனால் அந்த வழியாக செல்கிறவர்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே, தெருவிளக்கை மின்கம்பத்தில் சரியாக பொருத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
ஸ்ரீராம், உடன்குடி.

புதிய மின்கம்பம் அமைக்கப்படுமா? 
தூத்துக்குடி அருகே டி.சவேரியார்புரம் திருமண மண்டபம் எதிரில் பழமையான இரும்பு மின்கம்பம் உள்ளது. மழை நேரத்தில் அந்த மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்படுவதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அந்த வழியாக அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே, இரும்பு மின்கம்பத்துக்கு பதிலாக காங்கிரீட் மின்கம்பம் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
ஜான் பிரிட்டோ, டி.சவேரியார்புரம்.

Next Story