தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 6 Dec 2021 11:04 PM IST (Updated: 6 Dec 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


தெருநாய்களால் விபத்து ஏற்படும் அபாயம் 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட விஜயகோபாலபுரத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு பெரும்  அச்சுறுத்தலாக  இருக்கின்றது. மேலும் நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு திடீரென சாலையை கடப்பதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் இதனால் பெரும் விபத்து நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், விஜயகோபாலபுரம், பெரம்பலூர். 

சேறும், சகதியுமான சாலை
அரியலூர் வட்டம், வாலாஜா நகரம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஹவுசிங் போர்டு ராஜிவ் நகரில்  முறையான வடிகால், சாலை வசதி இல்லாததால் தற்போது மழையின் காரணமாக சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
அன்பழகன், ஹவுசிங்போர்டு, அரியலூர். 
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம்,  ஜெயங்கொண்டம் நகராட்சி உட்பட்ட 12-வது வார்டில் வடக்கு அரிசன தெருவில் முறையான வடிகால் வசதி இல்லாததால் தற்போது பெய்த மழைநீர் மண் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் சாலை சேறும், சகதியுமாக  உள்ளதால் வாகன ஓட்டிகளும், இப்பகுதி மக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஜெயங்கொண்டம், அரியலூர். 

குரங்குகளால் தொல்லை
புதுக்கோட்டை மச்சுவாடி தஞ்சாவூர் மெயின் ரோடு அதிக அளவில் குரங்குகள் காணப்படுகின்றன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து வீட்டில் உள்ள உணவு பொருட்கள், பழவகைகளை எடுத்துச்சென்றுவிடுகின்றன. மேலும் அவற்றை விரட்ட முயன்றால் கடிப்பதற்கு பாய்ந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.  
மலர்விழி, மச்சுவாடி, புதுக்கோட்டை. 

சாலையை விரிவாக்க வேண்டும்
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், இனுங்கூர் ஊராட்சி இனுங்கூரில் இருந்து நச்சலூர் செல்லும் சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலை குறுகளாக உள்ளதால் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை விரிவாக்கம் செய்து சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், இனுங்கூர், கரூர். 

குப்பைகளை உண்ணும் கால்நடைகள்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை செல்லும் சாலையோரத்தில் பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. சாலையில் வாகனங்கள் செல்லும்போது இந்த குப்பைகள் காற்றில் பறந்து அருகில் சென்று விழுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை கால்நடைகளும், பன்றிகளும் அவற்றை  உண்பதினால் அவற்றின் உடல்நிலை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றிவிட்டு அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை. 

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் 
கரூர் வெள்ளியணை ஜல்லிபட்டி ஆதிதிராவிடர் காலனி தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பாலமுருகன், ஜல்லிபட்டி, கரூா். 

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? 
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், ராஜாளிப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட முத்தக்கவுண்டம்பட்டியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும் இந்த சாலை மழையின் போது சேறும், சகதியுமாக காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வடிகால் வசதியுடன் கூடிய சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், முத்தக்கவுண்டம்பட்டி, புதுக்கோட்டை. 

சேறும், சகதியுமான சாலை 
திருச்சி மாவட்டம் துவாக்குடி அருணபுரிநகர் சாலை தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பெண்கள், வயதானவர்கள் இந்த சாலையில் நிலைதடுமாறி நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பாலசுப்பிரமணியம், துவாக்குடி, திருச்சி. 

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், விரகாலூர் கிராமத்தில் சந்தியாகப்பர் கோவில்தெரு அருகில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது பழுதடைந்து அதன் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.  பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதற்கு பதில் அப்பகுதியில் புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், விரகாலூர், திருச்சி. 

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் 
திருச்சி விமான நிலையம் அருகில் அமைந்துள்ள ஜே.கே.நகர் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்
திருச்சி  மேலகல்கண்டார்கோட்டை மஞ்சத்திடல் ரயில்வே கேட் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் ரெயில் வரும்போது ரெயில்வே கேட் மூடப்பகிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்று ரெயில் சென்ற பிறகு செல்கின்றன. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க இப்பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மேலகல்கண்டார்கோட்டை, திருச்சி. 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர்  வட்டம் கீழகுறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அண்ணா நகர், கந்தசாமி நகர், மகா சக்தி நகர், ராமச்சந்திரா கார்டன்  உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க துப்புரவு பணியாளர்கள் வருவது இல்லை. இதனால் இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டு வருவதால் இப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கந்தசாமி நகர், திருச்சி. 

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுமா? 
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், அலகரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமானவர்கள்  தங்களது வீடுகளில் மாடுகளை வளர்த்து அதன் மூலம்  கிடைக்கும் வருவாயை கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றன. இதனால் கால்நடைகள் வளர்க்கும் பொதுமக்களும், விவசாயிகளும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் 
நிவாஸ், அரியனாம்பேட்டை, திருச்சி.

சாய்ந்துள்ள மின்கம்பம் 
திருச்சி ஜங்சன் மேம்பாலத்தில் ஒரு மின் கம்பம் கீழே விழும் நிலையில்  சாய்ந்தவாறு காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது அல்லது வாகன போக்குவரத்தின்போது இந்த மின்கம்பம் கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே உயிரிழப்பு ஏற்படும் முன்பு இந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
நஜுமுதீன், ஸ்டாலின் நகர்,  திருச்சி.

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? 
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம்,  கூத்தூர் கிராமம் முத்து நகர் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால்  வீடுகள் மற்றும் பள்ளியை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது.  மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், முத்துநகர், திருச்சி. 

Next Story