மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி


மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி
x
தினத்தந்தி 6 Dec 2021 11:19 PM IST (Updated: 6 Dec 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி

அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த சின்னமோட்டுர் கிராமத்தை சேர்ந்த பாலையா மகன் லோகேஷ் (34). டிப்பர் லாரி டிரைவர். திருமணமாகி மனைவி, 8 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர். லோகேஷ் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளை வாட்டர் சர்வீஸ் செய்வதற்காக முனியப்பன் நாயுடு கண்டிகை பகுதியில் உள்ள கடைக்கு சென்றார்.

அங்கு மோட்டார் சைக்கிளை சர்வீஸ் செய்யது கொண்டிருந்த போது அங்கிருந்த கம்பரஷர் மீது மின்சாரம் பாய்ந்து இருப்பது அறியமல் அதை லோகேஷ் தொட்ட போது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற அரக்கோணம் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story