மகன்களிடம் இருந்து சொத்தை மீட்டுத்தர கோரி மூதாட்டி கோரிக்கை மனு


மகன்களிடம் இருந்து சொத்தை மீட்டுத்தர கோரி மூதாட்டி கோரிக்கை மனு
x
தினத்தந்தி 6 Dec 2021 11:19 PM IST (Updated: 6 Dec 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

மகன்களிடம் இருந்து சொத்துகள மீட்டுத்தரக்கோரி ராணிப்பேட்டையில் நடந்த குறைதீர்வுகூட்டத்தில் மூதாட்டி கோரிக்கை மனு கொடுத்தார்.

ராணிப்பேட்டை

மகன்களிடம் இருந்து சொத்துகள மீட்டுத்தரக்கோரி ராணிப்பேட்டையில் நடந்த குறைதீர்வுகூட்டத்தில் மூதாட்டி கோரிக்கை மனு கொடுத்தார்.

குறை தீர்வுகூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள், விவசாயிகள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வேண்டும், மழையினால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மனு கொடுத்தனர்.

 மொத்தம் 430 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

மூதாட்டி மனு

கூட்டத்தில், மூதாட்டி சுசீலா என்பவர் தனது இரண்டு பிள்ளைகள் தன்னை சரிவர கவனிக்காமலும், உணவு அளிக்காமலும் கஷ்டப்படுத்துகின்றனர். அவர்களிடம் இருந்து எனது சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் துணை கலெக்டர்கள் தாரகேஸ்வரி, இளவரசி, சேகர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story