கந்தர்வகோட்டை பகுதியில் ஆடு திருடிய 2 பேர் கைது
கந்தர்வகோட்டை பகுதியில் ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடு திருடர்களை பிடிக்க திருச்சி சரக டி.ஐ.ஜி.சரவணசுந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஆடு திருடர்களை கண்காணித்து கைது செய்து வருகிறார்கள். இந்தநிலையில் சிறப்பு தனிப்படை பிரிவின் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் கந்தர்வகோட்டை பகுதியில் ஆடு திருடும் கும்பலை பிடிக்க தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் கந்தர்வகோட்டை பகுதியில் ஆடுகளை திருடியதாக கிழக்கு தொண்டமான் ஊரணியைச் சேர்ந்த முத்து (வயது 45), வாராப்பூர் வட்டம் கலனிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (39) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசாா் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 10 ஆடுகள் மீட்கப்பட்டன. ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 பேர் மற்றும் 10 ஆடுகள், மோட்டார் சைக்கிள் ஆகியவை கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மாறனிடம் ஒப்படைக்கப்பட்டன.
Related Tags :
Next Story