சீறி பாய்ந்த மாட்டு வண்டி பந்தயம்


சீறி பாய்ந்த மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 7 Dec 2021 12:14 AM IST (Updated: 7 Dec 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

மானகிரியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே மானகிரி-தளக்காவூர் இடையே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பெரியமாடு பிரிவில் 20 ஜோடிகள் பங்கேற்றன. அதில் கம்பம் அழகுபிள்ளை முதல் இடத்தையும், பரளி சித்தார்த் இரண்டாம் இடத்தையும், மேலூர் அருகே நொண்டிக்கோவில்பட்டி துரைபாண்டி மூன்றாம் இடத்தையும், அவனியாபுரம் மோகன் நான்காம் இடத்தையும் வென்றனர். சின்னமாடு பிரிவில் 49 ஜோடிகள் பங்கேற்றன. இது இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது. முதல் பிரிவில், நாட்டரசன்கோட்டை ஆண்டிகோனார் முதல் இடத்தையும், சொக்கம்பட்டி செந்தில் இரண்டாம் இடத்தையும், காரைக்குடி சிவா மூன்றாம் இடத்தையும், திருப்பனவாசல் சுப்பையா நான்காம் இடத்தையும் வென்றனர். இரண்டாம் பிரிவில், குப்பச்சிப்பட்டி வைரம் முதல் இடத்தையும், கல்லூரணி பாலாஜி இரண்டாம் இடத்தையும், மலம்பட்டி காயத்திரி மூன்றாம் இடத்தையும், புரண்டிபுதுக்குடி ராஜசேகர் நான்காம் இடத்தையும் வென்றனர். வெற்றி பெற்ற காளைகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செலுத்தி அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story