சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே முறையூரில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 1000் ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சொக்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாத 3-வது சோமவாரத்தில் உலக நன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோவில் குருக்கள் சுரேஷ் தலைமையில் கங்கா தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்வதற்காக 1008 சங்குகள் நந்தி மீது சிவலிங்கம் இருப்பது போல வடிவமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதன்பிறகு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சங்காபிஷேகம் நடந்தது. அந்த புனித நீரை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.