சிவன் கோவில்களில் 108 சங்காபிஷேகம்


சிவன் கோவில்களில் 108 சங்காபிஷேகம்
x
தினத்தந்தி 7 Dec 2021 1:08 AM IST (Updated: 7 Dec 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

சிவன் கோவில்களில் 108 சங்காபிஷேகம் நடந்தது.

பெரம்பலூர்:

சோமவார விழா
பெரம்பலூரில் உள்ள புகழ்பெற்ற அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவார விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு மூலவர் மற்றும் அம்பாளுக்கு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடந்தது. துறைமங்கலத்தில் உள்ள மீனாட்சி சமேத சொக்கநாதர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு யாகமும், 108 சங்கு பூஜையும் நேற்று மாலை நடந்தது. யாக பூஜைகள் சிவமணி தலைமையில் நடந்தது.
இதைத்தொடர்ந்து 108 சங்குகளில் பூஜை செய்யப்பட்ட புனிதநீரை கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து மூலவருக்கு வண்ணமலர்களால் அலங்காரமும், மகாதீபாராதனையும் நடந்தது.
சங்காபிஷேகம்
இதேபோல் வாலிகண்டபுரத்தில் உள்ள வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் கோவிலிலும் சிறப்பு யாகமும், 108 சங்காபிஷேகமும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தனி உடனுறை பஞ்சநதீஸ்வரர் கோவிலில் மகாமண்டபத்தில் மூங்கில் குச்சிகளை தூண்களில் வைத்து கட்டி 301 தீபங்கள் ஏற்றப்பட்டன. காலையில் மூலவருக்கு அபிஷேகங்கள், சோடச உபசாரங்களுடன், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது.

Next Story