நெல்லையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


நெல்லையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:
நெல்லையில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ல் நாடு முழுவதும் பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் கருப்பு தினமாக கருதி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் டிசம்பர் 6-ந் தேதியான நேற்று பாபர் மசூதி இடத்தை மீட்டு முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தென் மண்டல செயலாளர் ரசூல்மைதீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சித்திக், துணைத்தலைவர் அஸ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறுவன தலைவர் பாளை.ராபிக் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். 

இதேபோல் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மேலப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தொகுதி தலைவர் மின்னத்துல்லா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக், நேஷனல் விமன்ஸ் பிரண்ட் மாநில துணைத்தலைவர் பாத்திமா ஆலிமா, எஸ்.டி.பி.ஐ. கட்சி நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி ஆகியோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்

நெல்லை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மேலப்பாளையத்தில் மாலையில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் செய்யது ஜாவித், டவுன் ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன், சமூக நல செயற்பாட்டாளர் சூர்யா சேவியர் ஆகியோர் பேசினர்.

மாநில செயற்குழு உறுப்பினர் மில்லத் இஸ்மாயில், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ரியாசூர் ரகுமான், மாவட்ட துணை செயலாளர்கள் காஜா, கம்புக்கடை ரசூல், பெஸ்ட் ரசூல், நவாஸ், மாஹீன், துணைத்தலைவர் தேயிலை மைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
மேலும் நெல்லை மேலப்பாளையம், பேட்டையில் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலப்பாளையத்தில் ஆட்டோ, கார் ஓடவில்லை. 

Next Story