ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி சாவு
ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரை அடுத்த பனையூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 50). கூலி தொழிலாளி. பனையூரில் நேற்று நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செல்லப்பாண்டி அருகில் இருக்கும் நிட்சேப நதியில் குளிக்க சென்றார்.
அப்போது ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் வெள்ளத்தில் செல்லப்பாண்டி அடித்து செல்லப்பட்டு அருகில் இருந்த தடுப்பணை அருகே பிணமாக கிடந்தார். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story