மழையில் வீடு இடிந்து 3 வயது குழந்தை பலி


மழையில் வீடு இடிந்து 3 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 7 Dec 2021 2:20 AM IST (Updated: 7 Dec 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

மழையில் வீடு இடிந்து 3 வயது குழந்தை பலி=மற்றொரு சம்பவத்தில் முதியவர் சாவு

வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாகவே நள்ளிரவில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த கனமழையின் காரணமாக வத்திராயிருப்பு அருகே உள்ள காடனேரி கிராமத்தில் காளீசுவரன்(வயது 26) என்பவரது வீட்டின் சுவர் நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த அவரது 3 வயது பெண் குழந்தை முத்தீஸ்வரி மீது சுவர் விழுந்தது. இதனால் பதறிய குழந்தையின் குடும்பத்தினர் உடனடியாக இடிபாடுகளை அகற்றினர். அக்கம்பக்கத்தினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். குழந்தையை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் குழந்தையின் உடலை பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.விருதுநகர் அருகே உள்ள செங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் (வயது 85). இவர் அந்த கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மகன்கள் மதுரையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செங்கோட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் காளியப்பன் வீடு இரவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த காளியப்பன் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story