டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
மணல் கடத்திய டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
மதுரை,
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபடுவது குறித்து அவ்வப்போது கண்காணித்து கனிமவள அதிகாரிகள், போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் அந்த பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில் கடந்த 2015-ம் ஆண்டு கனிமவளத்துறை அதிகாரிகள், போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது மணல் கடத்தி வந்த வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, வாகன டிரைவர் முத்தன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கனிமவள வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் சிவகுமார் ஆஜரானார். விசாரணை முடிவில், முத்தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரபி நேற்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story