பிளஸ்-1 மாணவிக்கு கொரோனா; பள்ளிக்கு விடுமுறை


பிளஸ்-1 மாணவிக்கு கொரோனா; பள்ளிக்கு விடுமுறை
x
தினத்தந்தி 7 Dec 2021 3:20 AM IST (Updated: 7 Dec 2021 3:20 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சேலத்தில் தனியார் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

சேலம்:
சேலத்தில் தனியார் பள்ளியில் படித்து வரும் பிளஸ்-1 மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவிகள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.  இந்த நிலையில் பரிசோதனை முடிவு வரும் வரை பள்ளிக்கு விடுமுறை அளித்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

Next Story