பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சூரமங்கலம்:
சேலம் குரங்குச்சாவடி பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள், டெய்லர். இவருடைய மகன் மணிமொழிசெல்வன் (வயது 18). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு டிப்ளமோ மெக்கானிக் படித்து வந்தார். இந்த நிலையில் மணிமொழிசெல்வன் நேற்று வீட்டில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்ததில் மணிமொழிசெல்வன் ஏற்கனவே இறந்தவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், நேற்று மணிமொழிசெல்வன் படித்த கல்லூரியில் இருந்து செல்லமாளுக்கு போன் வந்தது. அதில் வருகிற 20-ந் தேதி தேர்வு நடைபெற இருப்பதால் மணிமொழிசெல்வனை கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதை அவர் தனது மகனிடம் தெரிவித்தார். இந்த நிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் மாணவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story