சேலத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று வலசையூரை சேர்ந்த மணிமேகலை என்ற பெண் மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறித்தனர். பின்னர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி கோரிக்கை குறித்து கலெக்டரிடம் மனு கொடுக்க வேண்டும் என்று அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு
இது குறித்து மணிமேகலை கூறியதாவது:-
அயோத்தியாப்பட்டணத்தில் அரசு வணிக வளாத்தில் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். தற்போது கடைக்கு அதிக வாடகை கொடுக்கும் படி ஒப்பந்ததாரர் கூறுகிறார். அவர் கேட்கும் வாடகை கொடுக்கவில்லை என்றால் கடையை காலி செய்ய வேண்டும் என்றும் கூறி கொலை மிரட்டல் விடுக்கிறார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தீக்குளிக்க முயன்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையொட்டி நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story