மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட அரிசி- பருப்பு மூட்டைகள்


மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட அரிசி- பருப்பு மூட்டைகள்
x
தினத்தந்தி 7 Dec 2021 11:05 AM IST (Updated: 7 Dec 2021 11:05 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட அரிசி- பருப்பு மூட்டைகள்

தா.பேட்டை, டிச.7-
தா.பேட்டை அருகே மகாதேவி மலையப்ப நகர் காலனியில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு மையத்தில் அமைப்பாளராக பணியாற்றி வருபவர் சுசீலா. நேற்று இவர் தனது கணவர் சிதம்பரம் என்பவரிடம் சத்துணவு மையத்தில் இருந்து 2 மூட்டை அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை மோட்டார் சைக்கிளில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள், சிதம்பரம் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி அரிசி, பருப்பு மூட்டைகளை சோதனை செய்தனர். அதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்குவதற்காக அரசால் வழங்கப்பட்ட அரிசி, பருப்பு என்பது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் மலையப்ப நகர் பகுதியை சேர்ந்த ராஜீ என்பவர் கொடுத்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதிகாரிகளிடம் அரிசி, பருப்பு மூட்டைகள் ஒப்படைக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து ஒன்றிய அலுவலர்கள் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். சத்துணவு அமைப்பாளர் சத்துணவு மையத்தில் இருந்து அரிசி, பருப்பு ஆகியவற்றை தனது கணவரிடம் கொடுத்து அனுப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story