சென்னை கலெக்டர் அலுவலகம் வரும் பொதுமக்கள் நாளை ஒருநாள் வாகனங்களை தவிர்க்க வேண்டும்: சென்னை கலெக்டர்
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசுத்துறை அலுவலகங்களுக்கு வருகை தரும் பொதுமக்களும் புதன்கிழமை ஒரு நாள் மோட்டார் வாகனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயா ராணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் மாசினை கட்டுப்படுத்த பல்வேறு பசுமை முயற்சிகளை முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது. ஆகையால் மாசு கட்டுப்பாடு வாரியம் அதன் அனைத்து பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மாசற்ற அலுவலக வாரம்-பயண நாள் என கடைப்பிடித்து தனி நபர் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளது. இதனால் 250 பேர் பொது போக்குவரத்து மூலமோ அல்லது நடந்தோ அல்லது சைக்கிள் மூலமோ வருகின்றனர். இதன் மூலம் 20 சதவீதம் மாசு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களுக்கு வருகை தரும் பொதுமக்களும் நாளை (புதன்கிழமை) ஒரு நாள் மோட்டார் வாகனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயா ராணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story