வட்டமலை கரை ஓடை அணையின் நீர்மட்டம் 10 அடியாக உயர்வு


வட்டமலை கரை ஓடை அணையின் நீர்மட்டம் 10 அடியாக உயர்வு
x
தினத்தந்தி 7 Dec 2021 4:52 PM IST (Updated: 8 Dec 2021 2:21 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவில் வட்டமலை கரை ஓடை அணைக்கு தண்ணீர் 200 கன அடியாக உயர்ந்து நீர்மட்டம் 10 அடியை எட்டி உள்ளது.

வெள்ளகோவில்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் 1980 ம் ஆண்டு 600 ஏக்கர் பரப்பளவில் 27 அடி உயரத்தில், 30 கிராமங்கள் 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடையும் வகையில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் வட்டமலைக்கரை ஓடை அணை கட்டப்பட்டது.

அதற்கு பின்னிட்டு 3 முறை மட்டுமே பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் வட்ட மலை கரை ஓடை அணைக்கு தண்ணீர் வந்தது. அதற்கு பிறகு கடந்த 25 ஆண்டுகளாக தண்ணீர் வந்து சேரவில்லை. 

இதனால் வட்டமலை கரை ஓடைஅணை பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீர் விடக்கோரி அரசிடம் பல்வேறு வகையில் கோரிக்கை விடுத்தனர்.

அதையடுத்து கடந்த மாதம் 28ந்தேதியன்று  பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன வாய்க்கால் பொங்கலூர் அருகே உள்ள கள்ளிபாளையம் ஷட்டரிலிருந்து வட்டமலை கரை ஓடை அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
10 அடி உயர்ந்துள்ளது.

திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 1 தேதி மாலை வட்டமலை கரை ஓடை அணைக்கு வரத்தொடங்கியது, அப்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பொங்கல் வைத்து பூஜை செய்தும் மலர் தூவியும் வரவேற்றனர். தற்போது சராசரி 200 கன அடியாக உயர்ந்து தண்ணீர் வந்து கொண்டுள்ளது. 

27 அடி உயரமுள்ள அணையில் தற்போது 10 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதனால் வட்டமலை கரை ஓடை அணையை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய நிலங்களில் நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story