குண்டும்,குழியுமான சாலை
குண்டும்,குழியுமான சாலை
குண்டும்,குழியுமான சாலை
திருப்பூர் காட்டுப்பாளையம் பகுதி அமராவதி பாளையம் பிரதான சாலையில் மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே விபத்துகள் நடக்கும் முன்பு சாலையை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளியைச்சுற்றி சுகாதார சீர்கேடு
திருப்பூர் நெசவாளர் காலனி அருகில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனை உள்ளது. இங்குள்ள பள்ளி சுற்றுச்சுவருக்குப்பின்புறமும், மருத்துவமனையை ஒட்டியுள்ள இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த குதியில் சாக்கடை கழிவுகளை அகற்றாததாலும் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் பள்ளியை சுற்றி உள்ள குப்பையால், ஆசிரியர்களும், மாணர்வகளும் துர்நாற்றத்தின் மத்தியில் வகுப்பில் பாடம் படிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி குப்பைகளை அகற்ற வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேறும், சதியுமான சாலை
உடுமலை உடுக்கம்பாளையம் கிராமத்தில் பஸ் நிலையம் அருகில் உள்ள ஆதிதிராவிடர் காலனி செல்லும் சாலையில் வாகனப்போக்குவரத்து அதிகமாக உள்ளது. மழையின் காரணமாக அந்த சாலை குன்டும், குழியுமாகவும், சேறும், சகதியுமாக மாறிவிட்டது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
திருப்பூர் -பல்லடம் சாலையில் சின்னக்கரை மூணு முக்கு ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. இந்த நிலையில் இந்த மூன்று முக்கு பகுதியில் 4-வது குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது. ஆனால் குழாய் பதிக்கும் பணி முடிக்காமல் காலதாமதம் செய்து வருகிறார்கள். எனவே குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
---
Related Tags :
Next Story