பெண்களிடம் பண மோசடி
பெண்களிடம் பண மோசடி
பல்லடம், கடன் வாங்கி தருவதாக பெண்களிடம் பண மோசடி கோவையைச் சேர்ந்த பெண் மீது போலீசில் புகார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது பல்லடம் மாணிக்காபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த
பெண்கள் சிலர் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தனர் அவர்கள் கூறியதாவது கோவை சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ, 40, என்பவர் எங்களை போன் மூலம் தொடர்பு கொண்டு ரூ.5 லட்சம் கடன் உங்களுக்கு ஏற்பாடு தருகிறேன் அதற்கு நீங்கள் ரூ 30 ஆயிரம் முன் பணம் செலுத்த வேண்டும் பின்னர் கடன் தொகை பெற்ற விட்டு மாதம் ரூ.10 ஆயிரம் விதம் கட்டினால் போதும் என்று ஆசை வார்த்தைகளை கூறினார் அவரின் பேச்சை நம்பி அவர் அனுப்பிய வங்கிக்கணக்கில்நாங்கள் தலா ரூ.30 ஆயிரம் செலுத்தினோம் மேலும் உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் இருந்தால் அவர்களையும் இந்த திட்டத்தில் சேர்த்து விடுங்கள் என ஆசையை தூண்டி உள்ளார் இந்த நிலையில் பணம் கட்டி ஒரு மாதம் ஆகியும் கடன் தொகை கிடைக்காததால் ஜெயஸ்ரீயின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது இதையடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை
Related Tags :
Next Story