புதுக்கோட்டையில் புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது
புதுக்கோட்டையில் புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
சார்பதிவாளர் அலுவலகம்
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் ரூ.93.26 லட்சம் மதிப்பில் புதிதாக சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு அறை, சார்பதிவாளர் அறை, கணினி அறை, பதிவு வைப்பு அறை, மதிய உணவு அறை, இ-சான்றிதழுக்கான அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள அமைப்புகள், அவர்களுக்கான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மரக்கன்று நட்டார்
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குத்துவிளக்கு ஏற்றினார். அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டார்.
நிகழ்ச்சியில் நெல்லை பதிவு மன்ற துணை பதிவு தலைவர் ஆறுமுகம், தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் ஆ.பால்பாண்டி, தணிக்கை மாவட்ட பதிவாளர் நூர்ஜஹான், நிர்வாக சார்பதிவாளர் குருசாமி, வழிகாட்டு சார்பதிவாளர் மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story