உடன்குடி அருகே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்
உடன்குடி அருகே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்
உடன்குடி:
உடன்குடி அருகே மழைக்காலத்தில் தரைப்பாலம் தண்ணீர் மூழ்குகிறது. எனவே அங்கு உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தரைமட்ட பாலம்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள மாதவன்குறிச்சியில் இருந்து அமராபுரம் செல்லும் வழியில் தரைமட்ட பாலம் ஒன்று உள்ளது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் இந்த தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. சுமார் 2 மாத காலம் வரை தண்ணீர் தேங்குவதுடன் அந்த பாதையில் போக்குவரத்தும் தடை செய்யப்படுகிறது.
கருமேனியாற்றில் இருந்து தண்ணீர் கடலுக்கு சென்று சேரும்போது, எதிர்த்து வரும் தண்ணீர் இங்கு வந்து தேங்குகிறது. தற்போது அந்த தரைமட்ட பாலத்தில் சுமார் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
பொதுமக்கள் மனு
இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல், பொதுமக்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அங்கு ராட்சத குழாய்களை பதித்து அதன் மீது உயர்மட்ட பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதுதொடர்பாக அமராபுரம் கிராம மக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனுவும் அனுப்பி உள்ளனர்.
Related Tags :
Next Story