சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 7 Dec 2021 6:33 PM IST (Updated: 7 Dec 2021 6:33 PM IST)
t-max-icont-min-icon

சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

பொள்ளாச்சி

சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி மாக்கினாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பொதுமக்கள் முற்றுகை

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் மாக்கினாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வஞ்சியம்மாள் லே-அவுட் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதற்கிடையில் இந்த பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன் மண் சாலைக்கு பதிலாக பேவர் பிளாக் கற்கள் பதித்து சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கிடையில் சட்டசபை தேர்தல் வந்ததால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால் தேர்தலுக்கு பிறகும் சாலை பணிகளை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது 3 நாட்களுக்குள் சாலை பணிகளை செய்து கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் போ
ராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

அடிக்கடி விபத்துகள்

வஞ்சியம்மாள் லே-அவுட், பாஸ்கர் நகர் பகுதியில் மண் சாலையாக உள்ளது. இந்த சாலையை சீரமைத்து பேவர் பிளாக் கற்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது ஒரு ஆண்டு ஆகியும் பணிகள் முடியவில்லை. மேலும் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். மேலும் பொதுமக்களும் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
மேலும் ஜல்லி கற்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது. 

சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது 3 நாட்களுக்குள் சாலை பணிகளை விரைந்து முடிக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதன்படி சாலை பணிகளை முடிக்கவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி மீண்டும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story