தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று நடந்தது


தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று நடந்தது
x
தினத்தந்தி 7 Dec 2021 6:33 PM IST (Updated: 7 Dec 2021 6:33 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று நடந்தது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று நடந்தது.
சான்றிதழ் சரிபார்ப்பு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 2020-21-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் 85 பெண்கள், 225 ஆண்கள் என மொத்தம் 310 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் விரல் ரேகை பதிவு தூத்துக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார்.
வாய்ப்பு
அப்போது அவர் கூறுகையில், ‘போலீஸ் துறையில் சேர்ந்து பணியாற்ற நீங்கள் தேர்வாகி உள்ளீர்கள். இதன்மூலம் பொதுமக்களுக்கு சேவை செய்யக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்து உள்ளது. அதை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் தேர்வு எழுதுவதற்கு வழங்கிய சான்றிதழ் அனைத்தும் சரிபார்க்கப்படும், மேலும் உங்கள் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு, உங்கள் மீது குற்ற வழக்குகள் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்ட பிறகு நீங்கள் போலீஸ் துறையில் பணியாற்ற தகுதி பெறுவீர்கள். நீங்கள் வருங்காலங்களில் போலீஸ் துறையில் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும்’ என்றார்.
தொடர்ந்து அனைவரது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. ஒவ்வொருவரின் கைரேகையும் தனியாக தாளில் பதிவு செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் துறை அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அலுவலர் சுப்பையா, கண்காணிப்பாளர்கள் மாரியப்பன், செல்வக்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story