தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 20 பேர் சிக்கினர்

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 20 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 7 Dec 2021 6:43 PM IST (Updated: 7 Dec 2021 6:43 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 20 பேர் சிக்கினர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, மதுபாட்டில்கள், புகையிலைப்பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை  உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி, நேற்று முன்தினம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 35 மதுபாட்டில்கள், புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story