தூத்துக்குடி அருகே செல்போன் கடையில் திருட்டு


தூத்துக்குடி அருகே செல்போன் கடையில் திருட்டு
x
தினத்தந்தி 7 Dec 2021 7:07 PM IST (Updated: 7 Dec 2021 7:07 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே செல்போன் கடையில் திருடப்பட்டது

ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வீரமிக்கேல். இவரது மகன் வேல்முருகன் (வயது 29). இவர் முள்ளக்காட்டில் செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலையில் வழக்கம்போல் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
கடையின் உள்ளே சென்று பார்த்தபோது 3 ஸ்மார்ட் போன்கள் உள்பட 19 செல்போன்கள், 3 ஹெட்செட், 2 பவர் பேங், ரூ.3 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில், முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story