வாலிபர் மர்ம சாவு


வாலிபர் மர்ம சாவு
x
தினத்தந்தி 7 Dec 2021 7:40 PM IST (Updated: 7 Dec 2021 7:40 PM IST)
t-max-icont-min-icon

திருப்பாச்சூர் அருகே வாலிபர் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

திருவள்ளூரை அடுத்த கனகம்மா சத்திரத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 34). அடகு கடைக்காரர். இந்நிலையில் நேற்று திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் உள்ள தனது உறவினர் அசோக் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். இந்த நிலையில், திருப்பாச்சூர் அருகே அஜித் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் சம்பவ இடத்திற்கு சென்று அஜித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப் பதிவு செய்து அவரது சாவு குறித்து விசாரித்து வருகிறார்.


Next Story