கோத்தகிரி மார்க்கெட்டில் அதிகாரி ஆய்வு


கோத்தகிரி மார்க்கெட்டில் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 7 Dec 2021 7:45 PM IST (Updated: 7 Dec 2021 7:45 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி மார்க்கெட்டில் அதிகாரி ஆய்வு

கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதுடன், வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை கோத்தகிரி மார்கெட்டில் கடை வைத்துள்ள வியாபாரிகள், கடைகளில் பணிபுரிவோர் மற்றும் மார்கெட்டிற்கு பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளார்களா? என கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது அனைவரும் முககவசம் அணிந்துள்ளார்களா?, கடைகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் உள்பட பேரூராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story