ஒமைக்ரான் வைரசை கண்டறிய ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் 7,000 டேக்பாத் கிட் தயார்


ஒமைக்ரான் வைரசை கண்டறிய ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் 7,000 டேக்பாத் கிட் தயார்
x
தினத்தந்தி 7 Dec 2021 7:51 PM IST (Updated: 7 Dec 2021 7:51 PM IST)
t-max-icont-min-icon

ஒமைக்ரான் வைரசை கண்டறிய ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் 7,000 டேக்பாத் கிட் தயார்

ஊட்டி

ஒமைக்ரான் வைரசை கண்டறிய ஊட்டி அரசு மருத்துவமனையில் 7,000 டேக்பாத் கிட் தயார் நிலையில் உள்ளதாக டீன் மனோகரி தெரிவித்தார்.

கண்காணிப்பு பணிகள்

கொரோனா வைரசை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் ஊடுருவி உள்ளது. 

இதனால் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

மருத்துவ குழுவினர் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்காணித்து, தொற்று அறிகுறிகள் தென்பட்டால் பிற மாநிலத்தவர்களை திருப்பி அனுப்புகின்றனர்.

சிறப்பு வார்டு

ஒமைக்ரான் பாதித்த நாட்டில் இருந்து இதுவரை நீலகிரி மாவட்டத்திற்கு யாரும் வரவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் முன்னெச்சரிக்கையாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. 

மேலும் ஒமைக்ரான் என்ற புதிய வைரசை கண்டுபிடித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி கூறியதாவது:-

ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. தனித்தனி அறைகளில் 21 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு ஆக்சிஜன், வெண்டிலேட்டர் போன்ற வசதிகள் உள்ளன. மேலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது.

7,000 டேக்பாத் கிட்

வெளியிடங்களில் இருந்து நீலகிரிக்கு வருகிறவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளதா என்பதை கண்டறிய டேக்பாத் கிட் வரவழைக்கப்பட்டு உள்ளது. தற்போது 7,000 டேக்பாத் கிட் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மாதிரி பரிசோதனையில் மரபணுக்களை 3 வகைகளாகப் பிரித்து ஆய்வகத்தில் பரிசோதனை மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

கோவை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற சர்வதேச விமான நிலையங்களுக்கு ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து நீலகிரிக்கு வருகிறவர்களின் விவரங்கள் சேகரித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Next Story