நடுவட்டத்தில் பஸ்நிலைய கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு


நடுவட்டத்தில் பஸ்நிலைய கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Dec 2021 7:53 PM IST (Updated: 7 Dec 2021 7:53 PM IST)
t-max-icont-min-icon

நடுவட்டத்தில் பஸ்நிலைய கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு

கூடலூர்

கூடலூர் அருகே நடுவட்டம் பேரூராட்சியில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை கலெக்டர் எஸ்.பி. அம்ரித் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது பணி தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பி.இப்ராகிம்ஷா, பேரூராட்சி செயல் அலுவலர் கே. ஜி. பிரதிப்குமார் மற்றும் இளநிலை பொறியாளர் வின்சன்ட் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக தமிழக அரசின் உத்தரவின் பேரில் நடுவட்டம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிப்பது தொடர்பான பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். 

நடுவட்டம் பஜார் உள்பட முக்கிய இடங்களுக்கு பேரணி சென்றது. அப்போது விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை மாணவர்கள் ஏந்தி சென்றனர்.

Next Story