கூடலூரில் தொழிலாளி வீட்டில் 16½ பவுன் நகை திருட்டு
கூடலூரில் தொழிலாளி வீட்டில் 16½ பவுன் நகை திருட்டு போனது.
கூடலூர்:
கூடலூர் 4-வது வார்டு சுக்காங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் தனது மகள் சுவேதாவை அதே பகுதியை சேர்ந்த சினோ என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து இருந்தார்.
சுவேதாவும், சினோவும் தினமும் வெளியில் வேலைக்கு சென்று வந்தனர். இதனால் சுவேதா தனக்கு சொந்தமான 16½ பவுன் நகைகளை தந்தை சரவணனின் வீட்டில் பீரோவில் பாதுகாப்பாக வைக்கும்படி கொடுத்து இருந்தார்.
இந்தநிலையில் கடந்த 4-ந்தேதி இரவு சரவணன் பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் வைக்கப்பட்டு இருந்த நகைகளை காணவில்லை. மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அல்போன்ஸ்ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story