அம்பேத்கர் முழுஉருவ சிலைக்கு அமைச்சர் மரியாதை


அம்பேத்கர் முழுஉருவ சிலைக்கு அமைச்சர் மரியாதை
x
தினத்தந்தி 7 Dec 2021 8:23 PM IST (Updated: 7 Dec 2021 8:23 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 65-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

அப்போது திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவச்சிலைக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் தலைமை தாங்கி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, தி.மு.க.வின் திருவள்ளூர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story