தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மாணவர்கள் அவதி
திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு வழியாக மாரம்பாடி, பூத்தாம்பட்டிக்கு மாலை நேரத்தில் முறையாக பஸ் வருவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மாணவர்களின் நலன்கருதி பஸ்களை முறையாக இயக்க வேண்டும்.
-பிரபாகர், மாரம்பாடி.
நூலக கட்டிடம் சேதம்
திண்டுக்கல் அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியில் கிளை நூலகம் இருக்கிறது. இங்கு தினமும் பலர் புத்தகங்கள், நாளிதழ்களை வாசிக்க வருகின்றனர். இந்த நிலையில் நூலக கட்டிடத்தின் மேற்கூரை சேதம் அடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து விழுகின்றன. இதனால் வாசகர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே நூலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.
-தனசேகர், சிறுநாயக்கன்பட்டி.
எரியாத உயர்கோபுர மின்விளக்கு
திண்டுக்கல்-பழனி சாலையில் இருந்து திண்டுக்கல் நகருக்குள் நுழையும் இடத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பல நாட்களாக எரியவில்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்துவிடுவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்ய வேண்டும்.
-கண்ணன், திண்டுக்கல்.
பாலத்தை சீரமைக்க வேண்டும்
தேனி அல்லிநகரம் வெங்கடகோவில் பகுதியில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி மண் அரிப்பால் சேதம் அடைந்து விட்டது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தை சீரமைக்க வேண்டும். அங்கு திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு அபாயம் உள்ளது. அதை தடுக்க குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
-திருக்குமரன், அல்லிநகரம்.
குப்பை குவியல்
திண்டுக்கல் ஆர்.எம்.காலனி வி.ஐ.பி.நகரில் 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு அவை துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, திண்டுக்கல்.
Related Tags :
Next Story