உளுந்தூர்பேட்டையில் அரசு சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்து 10 பயணிகள் காயம்


உளுந்தூர்பேட்டையில்  அரசு சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்து 10 பயணிகள் காயம்
x
தினத்தந்தி 7 Dec 2021 10:34 PM IST (Updated: 7 Dec 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் அரசு சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்து 10 பயணிகள் காயம்


உளுந்தூர்பேட்டை

மதுரையிலிருந்து  குளிர்சாதன வசதியுடன் கூடிய அரசு சொகுசு பஸ் ஒன்று 37 பயணிகளுடன் புறப்பட்டு சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜோதீஸ்வரன் பஸ்சை ஓட்டினார். உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் உள்ள தனியார் பால்பண்ணை அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்தில் சிக்கிய பஸ்சை மீட்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story