கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற தம்பதியால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற தம்பதியால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி
சின்னசேலம் அருகே திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் கோவிந்தராஜ்(வயது 45). இவர் நேற்று முன்தினம் அவரது மனைவியுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது எலவடி கிராம எல்லையில் கோவிந்தராஜூக்கு சொந்தமாக நிலத்தில் சுமார் 35 சென்ட் நிலத்தை பக்கத்து நிலத்துக்காரர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் இதை தட்டிக்கேட்டதால் தன்மீது போலீஸ் நிலையத்தில் பொய் புகார் கொடுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்து வருவதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
Related Tags :
Next Story