வாணக்கன்காட்டில் மூடப்பட்ட ஹைட்ரோ கார்பன் ஆழ்குழாய் கிணறு பகுதியில் அதிகாரிகள் ஆய்வு


வாணக்கன்காட்டில் மூடப்பட்ட  ஹைட்ரோ கார்பன் ஆழ்குழாய் கிணறு பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 7 Dec 2021 10:50 PM IST (Updated: 7 Dec 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் ஆழ்குழாய் கிணறு பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்யப்பட்டது.

வடகாடு:
வடகாடு அருகேயுள்ள வாணக்கன்காட்டில் ஓ.என்.ஜி.சி. துறைக்கு சொந்தமான ஹைட்ரோ கார்பன் ஆழ்குழாய் எண்ணெய் கிணறுகள் தொடங்கப்பட்டது. பின்னர் இதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிந்த விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை கைவிடுவதாக அறிவித்து அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து வாணக்கன்காடு பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றை ஓ.என்.ஜி.சி. மூலமாக மூடப்பட்டது. எனினும் கைப்பற்றப்பட்ட விவசாய நிலங்கள் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கூட இப்பகுதியில்  ஓ.என்.ஜி.சி. பொறியியல் அதிகாரிகள் ஆய்வு நடத்தி சென்ற நிலையில், தற்போது நேற்று மீண்டும் ஓ.என்.ஜி.சி. புவியியல் ஆராய்ச்சி பொறியாளர் அருண்குமார், பொறியாளர் எழில்வாணன், மதிவாணன் ஆகியோர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு மீண்டும் ஆய்வு செய்து சென்றுள்ளது. விரைவில் விவசாயிகளிடம் விவசாய நிலங்கள் ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Next Story