டிரான்ஸ்பார்மர் மீது சரக்குவேன் மோதியது


டிரான்ஸ்பார்மர் மீது சரக்குவேன் மோதியது
x
தினத்தந்தி 7 Dec 2021 11:26 PM IST (Updated: 7 Dec 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே டிரான்ஸ்பார்மர் மீது சரக்குவேன் மோதியதில் 6 மணி மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டனர்.

திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி அருகே டிரான்ஸ்பார்மர் மீது சரக்குவேன் மோதியதில் 6 மணி மின்தடை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டனர். 
சரக்குவேன் மோதியது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி- முத்துப்பேட்டை சாலையில்  செக்கடி குளம் உள்ளது. நேற்று இந்த குளத்தின் எதிரே உள்ள டிரான்ஸ்பார்மரில் திருத்துறைப்பூண்டியில் இருந்து நெடும்பலம் பகுதிக்கு கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த சரக்கு வேன் திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதனால் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து அந்த பகுதியில் 6 மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் தடைபட்டது. இந்த விபத்தில் வேனை ஓட்டிய டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். 
பழுது நீக்கினர்
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கி மக்களுக்கு மின்வினியோகம்   கிடைக்க ஏற்பாடு செய்தனர். இது குறித்து திருத்துறைப்பூண்டி  போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story