மாவட்ட செய்திகள்

பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு + "||" + Sudden death

பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு

பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு
பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீரென இறந்ததால் அவரது கணவர் போலீசில் புகார் அளித்தார்.
தோகைமலை, 
காதல் திருமணம்
தோகைமலை அருகிலுள்ள கொசூர் ஊராட்சி நாதிபட்டியை சேர்ந்தவர் விசுவநாதன் (வயது 28). இவரது மனைவி வீரமணி (27). இவர்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து உள்ளனர்.
இந்த நிலையில் வீரமணியின் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக 2-வது பிரசவத்தின்போது வீரமணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சிகிச்சை பலனின்றி சாவு
தற்போது 3-வது முறையாக வீரமணி கருவுற்றிருந்தார். இதையடுத்து, கடந்த 5-ந் தேதி பஞ்சப்பட்டி அரசு சுகாதார நிலையத்தில் வீரமணி பிரசவத்திற்கு உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், குழந்தையின் எடை அதிகமாக உள்ளது. எனவே மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். அதன்பேரில் அங்கு சிகிச்சை பெற்று வந்த வீரமணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில் பிரசவத்திற்கு பிறகு வீரமணிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு சிகிச்சையும் அளித்தாக தெரிய வருகிறது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வீரமணி பரிதாபமாக இறந்தார்.
இந்தசம்பவம் குறித்து விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவில் நிர்வாகி திடீர் சாவு; போலீசார் விசாரணை
வடக்கன்குளத்தில் கோவில் நிர்வாகி திடீரென இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. கட்டிட தொழிலாளி திடீர் சாவு
நெல்லை மேலப்பாளையத்தில் கட்டிட தொழிலாளி திடீரென இறந்தார்.
3. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் திடீர் சாவு
கோவில் விழாவில் பங்கேற்று திரும்பிய ராணுவ வீரர் திடீரென இறந்தார்.
4. லாரி டிரைவர் திடீர் சாவு
திசையன்விளை அருகே லாரி டிரைவர் திடீரென்று இறந்தார்.
5. திருமணமான ஒரு மாதத்தில் புது மாப்பிள்ளை திடீர் சாவு போலீஸ் விசாரணை
திருமணமான ஒரு மாதத்தில் புது மாப்பிள்ளை திடீர் சாவு போலீஸ் விசாரணை