நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தினக்கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி மன்னார்குடியில் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி;
தினக்கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி மன்னார்குடியில் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தினக்கூலியை ரூ.600-ஆக உயர்த்தி வழங்க வலியுறுத்தி நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு நகராட்சி ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முரளி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் ரகுபதி கலந்து கொண்டு பேசினார்.
குப்பை வண்டிகள்
இதில் சி.ஐ.டி.யூ. மாவட்டக்குழு உறுப்பினர் ஜெகதீசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் தாயுமானவன், அரசு போக்குவரத்து கழக மண்டல செயலாளர் கோவிந்தராஜன், உள்ளாட்சி ஊழியர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் லோகநாயகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தினக்கூலியை ரூ- 600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். இ.பி.எப் பட்டியலை ஆண்டுதோறும் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு தேவையான குப்பை வண்டிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story