ஓசூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் திடீர் சாவு உதவி கலெக்டர் விசாரணை
ஓசூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் திடீர் சாவு உதவி கலெக்டர் விசாரணை
ஓசூர்:
ஓசூர் அருகே பூனப்பள்ளி பக்கமுள்ள தாசரப்பள்ளியை சேர்ந்தவர் ஆதில்கான் சவுத்ரி. இவருடைய மனைவி சோனி (வயது 29). இவர்கள் கடந்த 4 ஆண்டுளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் சோனிக்கு கடந்த சில தினங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட சோனியை உறவினர்கள் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சோனி திடீரென இறந்து விட்டார். பெண்ணுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், இதுகுறித்து ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story