பேரணாம்பட்டில் தொழிலாளி வீட்டில் 8 பவுன் நகை திருட்டு
தொழிலாளி வீட்டில் 8 பவுன் நகை திருட்டு
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு அருகே உள்ள கொத்தப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 32). இவர் பெங்களூருவில் குடும்பத்துடன் தங்கி சென்ட்ரிங் கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார். இதனால் கொத்தப்பல்லி கிராமத்தில் உள்ள இவரது வீடு பூட்டி இருந்தது. அதே கிராமத்தில் வசிக்கும் உறவினர் ஒருவர் தினமும் வீட்டை திறந்து பராமரித்து வந்துள்ளார்.
நேற்று காலை யுவராஜ் வீட்டு முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து யுவராஜுக்கு தகவல் தெரிவித்ததும், அவர் வந்து பார்த்தபோது மர்ம ஆசாமிகள் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை, 200 கிராம் வெள்ளி பொருட்கள், டி.வி. மற்றும் ரூ.13,000 ஆகியனவற்றை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மர்மநபர்கள் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வருபகின்றனர். எனவே இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் ென பஒதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story