இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி கடல் அட்டைகள் சிக்கின
மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் சிக்கின.
பனைக்குளம்
மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் சிக்கின.
கடல் அட்டைகள்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து கடல் அட்டைகள் கடத்தப்பட உள்ளதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதை தொடர்ந்து மண்டபம் கடலோர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசமூர்த்தி, யாசர் மவுலானா மற்றும் கடலோர போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் இணைந்து வேதாளை கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த 5-க்கும் மேற்பட்டவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
வேதாளை அருகே உள்ள தென்னந்தோப்பில் போலீசார் சோதனை செய்தபோது, அங்கு 30-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கேன்களில் பதப்படுத்தப்பட்ட அரிய வகை உயிரினமான கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது.
ரூ.1 கோடி
இதை தொடர்ந்து அங்கு இருந்த சுமார் 2 டன் கடல் அட்டைகளை கைப்பற்றிய கடலோர போலீசார், அவற்றை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தப்பி ஓடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்றும், இது இலங்கைக்கு கடத்துவதற்காக பதப்படுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story