தண்டனைக்கு பயந்து தற்கொலை


தண்டனைக்கு பயந்து தற்கொலை
x
தினத்தந்தி 8 Dec 2021 12:08 AM IST (Updated: 8 Dec 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

தண்டனைக்கு பயந்து தற்கொலை

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ராமநாதன்(வயது 42). இவர் மீது காரைக்குடியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2015-ம் வருடம் போக்சோ வழக்கு ஒன்று பதிவானது. தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட உள்ளது. இதனால் ராமநாதன் சம்பவத்தன்று பாகனேரியிலுள்ள தன்னுடைய பாட்டி தனலட்சுமி வீட்டிற்கு சென்றார். அங்கு விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி, மதகுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story