3 மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சிறுமி சென்னையில் மீட்பு
குலசேகரம் அருகே 3 மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சிறுமி சென்னையில் மீட்கப்பட்டார். அவரை கடத்தி சென்ற தொழிலாளி ேபாக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
குழித்துறை:
குலசேகரம் அருகே 3 மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சிறுமி சென்னையில் மீட்கப்பட்டார். அவரை கடத்தி சென்ற தொழிலாளி ேபாக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பாலியல் பலாத்காரம்
குலசேகரம் அருகே உள்ள ஈஞ்சக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங் (வயது30), தொழிலாளி. இவர் 17 வயதுடைய ஒரு சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி கடந்த செப்டம்பர் மாதம் கடத்தி சென்றார்.
இதற்கிடையே சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் மார்த்தாண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ெஜயசிங் சிறுமிைய சென்னைக்கு கடத்தி சென்று அங்கு தலைமறைவாக வாழ்ந்து வருவது தெரிய வந்தது.
சென்னையில் கைது
இதையடுத்து போலீசார் சென்னைக்கு சென்று சிறுமியை மீட்டு நேற்று முன்தினம் அழைத்து வந்தனர். அத்துடன் ஜெயசிங்கும் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார்.
மேலும் ஜெயசிங் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 3 மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சிறுமி சென்னையில் மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story