சிமெண்டு மூட்டை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது
நெல்லை அருகே சிமெண்டு மூட்டை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பேட்டை:
நெல்லையை அடுத்த தச்சநல்லூர் தனியார் சிமெண்டு ஆலையில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் கொல்லத்திற்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. பழைய பேட்டையை கடந்து தற்போது தென்காசி நாற்கர சாலை பணிகள் நடைபெற்று வருவதால் சாலையின் ஒருபுறம் சரள் மண் போடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பெய்த கன மழையில் மண் ஈரப்பதத்தில் இருந்தது.
இந்த நிலையில் லாரி சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக ரோட்டின் ஓரத்தில் டிரைவர் லாரியை ஒதுக்கினார். அப்போது லாரியின் சக்கரம் மண்ணில் பதிந்ததால் ஒருபுறம் சாய்ந்து லாரி சாைலயோரத்தில் கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த சிமெண்டு மூட்டைகள் அனைத்தும் கீழே விழுந்தன. தகவல் அறிந்ததும் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story