குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு.போட்டி கூட்டம் நடத்தியதால் பரபரப்பு


குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு.போட்டி கூட்டம் நடத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Dec 2021 12:25 AM IST (Updated: 8 Dec 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

வந்தவாசி

வந்தவாசி வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கீதாலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதுபோன்ற குறைதீர்வு கூட்டங்கள் பல ஆண்டுகளாக தாசில்தார்கள் தலைமையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தை தாலுகா அலுவலகத்திலேயே தொடர்ந்து நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இரு இடத்திலும் நடத்தாமல் 2 மாதங்களாக அருகில் உள்ள கிராமமான பிருதூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். பிறகு, தாலுகா அலுவலகத்திற்கு சென்ற விவசாயிகள் அலுவலக வளாகத்தில் போட்டி  குறைதீர்வு கூட்டத்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கூட்டத்தில் வாழ்குடை புருஷோத்தமன், மாம்பட்டு ரமேஷ், அப்துல்காதர், சுண்ணாம்புமேடு ரிஸ்வான், குறிப்பேடு முருகன், ஜெயப்பிரகாஷ் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story