பெண் உள்பட 2 பேர் பலி
பெண் உள்பட 2 பேர் பலி
திருச்சி, டிச.8-
லால்குடி கண்ணாகுடி காந்திநகரை சேர்ந்தவர் விஜயபாஸ்கர் (வயது 46). இவருடைய மனைவி மெர்சி ஜாக்குலின் மேரி (40). சம்பவத்தன்று இவர் குமுளூர்-பெருவளப்பூர் சாலையில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஸ்கூட்டரின் பின்புற சக்கரத்தின் டயர் திடீரென பஞ்சர் ஆனது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து ஸ்கூட்டருடன் மெர்சி ஜாக்குலின் மேரி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை, அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் மதுரை தல்லாகுளம் கமலாநகரை சேர்ந்தவர் கணேஷ்குமார் (61). இவருடைய மனைவி மேகலா (58). சம்பவத்தன்று திருச்சி-திண்டுக்கல் சாலையில் தனது காரில் வந்து கொண்டிருந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முத்தப்புடையான் பட்டி அருகே கார் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் மேகலா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். கணேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story